நவம்பர் 2010: [November 2010]
இன்னிக்கு நைட் 8 மணிக்கு ஃப்லைட், ப்ரான்ஸ்க்கு. 10 நாள் ஆகும் திரும்ப வர.
அஞ்சலீக்கு இது பிடிக்கல. என்கிட்ட ரெண்டு தடவ கேட்டா கண்டிப்பா போகனுமான்னு.
அஞ்சலி: " Agreement sign பண்ணும்போது போகணும்தான சொன்ன, இப்போ என்ன?..... ஏதாவது சொல்லி ஸ்கிப் பண்ணுடா!"
கௌதம்: "இது அடுத்த ப்ராஜெக்ட் பத்தி discuss panna மா...நல்ல சான்ஸ்...இம்ப்ரெஸ் பண்ணா..ப்ரோமோஷன் கன்ஃபர்ம் டா..ப்லீஸ்"...
அற மனசோட தான் ஒத்துக்கிட்டா. ஆனா எனக்கு இது முக்கியமான விசிட். லைஃப் டைம் ஆப்பர்ச்சுநிட்டி. போயே ஆகணும்.
ட்ரெஸ் பேக் பண்ணும் போது கூட எதுவுமே பேசாம அமைதியா இருந்தா. எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது.
நான் ஆல்மோஸ்ட் கிளம்பிட்டேன் ஆனா அஞ்சலீ இன்னும் நைட் ட்ரெஸ்ல தான் இருந்தா.
கௌதம்: "இப்பிடி தான் நீ என்ன சென்ட் ஆஃப் பண்ண வரபோரியா, ரெடீ ஆகல, என் பாஸோட பையனும் என் கூட வர்றான், அதுனால என் பாஸ் ஃபாமிலி எல்லாம் கூட வர்றாங்க"
லேசா என்ன ஒரு மொற மொறச்சா.
அஞ்சலீ: "நான் வந்துருவேண்...ஆனா என்ன... நீ ஃப்லைட் போர்ட் பண்ணத்துக்கு அப்புறம்...உன் பாஸ எனக்கு தெரிஞ்ச நாலு கேட்ட வார்த்தெல திட்டிடுவேன் பரவால்லயா?"
நான் அதுக்கு அப்புறம் அவ கிட்ட எதுவும் பேசல.
ஏர்போர்ட்:
ஏர்போர்ட்குள்ள போனதும் அவளுக்கு கால் பண்ணேன், அவ பிக் பண்ணல.
லக்கேஜ் செக் முடிஞ்சது.
பாஸ்போர்ட் கௌன்டர் வந்துட்டேன், ...என் டிக்கெட்...அப்புறம் என் பாஸ்போர்ட் செக்..
கௌன்டர்ல இருந்த லேடி ஆஃபீசர் என்ன பார்த்து சிரிச்சாங்க.
லேடி ஆஃபீசர்: "I dont think you are going to France today, or any time soon...."
என் கிட்ட டிகெட்ட திரும்ப கொடுத்துட்டு...
லேடி ஆஃபீசர்: "You better get a movie ticket tonite! that would do!!..ha..ha"
எதுக்கு சிரிச்சாங்கனு தெரியல.
என் பாஸ்போர்ட்ட பார்த்தேன்... என் ஃபோடோல பெரிய மீசை....வீரப்பனோட மீச மாதிரி...அப்புறம் ..ஒரு பெரிய மச்சம் ...கறுப்பா ..பெருசா..என் கன்ணத்துல...பேணாவால வரஞ்சிருந்தது!!! என் டிக்கெட்.....அது மேல...எழுதி இருந்தது "Come back dear!"னு...பேருசா அதுவும் ப்ளாக் இங்க்ல!!!
"அஞ்சலீ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! "
------
என் பாஸ்கிட்ட emergency nu சொல்லி சமாளிக்கிறதுக்குள்ளே உயிர் போய்டுச்சு.
நேரா வீட்டுக்கு வந்தேன்....பயங்கர கோபமா...கதவ தட்டினேன்...கதவு தெறந்தேதான் இருந்தது..
வேகமா உள்ள போனேன்... அஞ்சலீ ஜன்னாலோராமா நின்நிட்டு இருந்தா. பக்கத்துல போய் அவ தோள பிடிச்சி திருப்பினேன்.
கௌதம்: " என்ன பன்னீருக்"
டக்குனு அவ கையால என் வாய மூடினா..
"வேணாம் கௌதம் திட்டாத...ப்லீஸ்........."
என்ன கட்டிப்புடிச்சு...தோள்ல சாஞ்சா...!
தல குனிஞ்சிசுக்கிட்டே .... "Im sorry..da...நான் ஒரு பைத்தியம்..".
கண்ணெல்லாம் தண்ணி...அப்படியே என்ன பார்த்தா..கண்ணுக்கு நேரா கண்ணு..
"எனக்கு உன்னோட வாழனும் கௌதம்......ஒவ்வொரு நிமிஷமும்..." "எனக்கு பயமா இருக்குடா.."
.காதலிக்கிறதுக்கும், ..அப்புறம் வாழ்றதுக்கும்...அஞ்சலிக்கிட்ட டைம் இல்ல...she had a divine commitmentனு சொல்லலாம்!!!
[அது தான் நான் அஞ்சலீ கிட்ட கடைசியா கோபப்பட்டது].
என்ன அப்போ கட்டி புடிச்சது ..இன்னும் விடல...! ரெண்டு பெரும் அப்படியே இருந்தோம். நான் அவ காது பக்கம் போய் மெதுவா...
"ஹேய் ..பொண்டாட்டி...ஐ லவ் யூ டி.."
என்ன இன்னும் இருக்கமா கட்டி புடிச்சு.. லேசா சிரிச்சா...
கௌதம்: "மூவீ போலாமா?!"....
அஞ்சலீ மெதுவா கண்ண தொடச்சிக்கிட்டே....பாவமா...."என்ன மூவீ?"...னு கேட்டா...
எனக்கு சிரிக்கிறதா.. அழுகிறதானு தெரியல......
ஆனா ஒண்ணு மட்டும் உன்மைங்க....
அஞ்சலீ இஸ் crazy ! ! !
-----------[நாட்கள் தொடரும்]------------------------------------------------------------------