Showing posts with label அஞ்சலீ நாட்கள்.... Show all posts

அஞ்சலீ நாட்கள்... (2)  

Posted by Peter Abdul Jegadeesh in














































                                                                                                                     நவம்பர் 2010: [November 2010]






இன்னிக்கு நைட் 8 மணிக்கு ஃப்லைட், ப்ரான்ஸ்க்கு. 10 நாள் ஆகும் திரும்ப வர.

அஞ்சலீக்கு இது பிடிக்கல. என்கிட்ட ரெண்டு தடவ கேட்டா கண்டிப்பா போகனுமான்னு.

அஞ்சலி: " Agreement sign பண்ணும்போது போகணும்தான சொன்ன, இப்போ என்ன?..... ஏதாவது சொல்லி ஸ்கிப் பண்ணுடா!"

கௌதம்: "இது அடுத்த ப்ராஜெக்ட் பத்தி discuss panna மா...நல்ல சான்ஸ்...இம்ப்ரெஸ் பண்ணா..ப்ரோமோஷன் கன்ஃபர்ம் டா..ப்லீஸ்"...

அற மனசோட தான் ஒத்துக்கிட்டா. ஆனா எனக்கு இது முக்கியமான விசிட். லைஃப் டைம் ஆப்பர்ச்சுநிட்டி. போயே ஆகணும்.

ட்ரெஸ் பேக் பண்ணும் போது கூட எதுவுமே பேசாம அமைதியா இருந்தா. எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது.

நான் ஆல்‌மோஸ்ட் கிளம்பிட்டேன் ஆனா அஞ்சலீ இன்னும் நைட் ட்ரெஸ்ல தான் இருந்தா.

கௌதம்: "இப்பிடி தான் நீ என்ன சென்ட் ஆஃப் பண்ண வரபோரியா, ரெடீ ஆகல, என் பாஸோட பையனும் என் கூட வர்றான், அதுனால என் பாஸ் ஃபாமிலி எல்லாம் கூட வர்றாங்க"

லேசா என்ன ஒரு மொற மொறச்சா.

அஞ்சலீ: "நான் வந்துருவேண்...ஆனா என்ன... நீ ஃப்லைட் போர்ட் பண்ணத்துக்கு அப்புறம்...உன் பாஸ எனக்கு தெரிஞ்ச நாலு கேட்ட வார்த்தெல திட்டிடுவேன் பரவால்லயா?"

நான் அதுக்கு அப்புறம் அவ கிட்ட எதுவும் பேசல.


ஏர்போர்ட்:

ஏர்போர்ட்குள்ள போனதும் அவளுக்கு கால் பண்ணேன், அவ பிக் பண்ணல.

லக்கேஜ் செக் முடிஞ்சது.

பாஸ்போர்ட் கௌன்டர் வந்துட்டேன், ...என் டிக்கெட்...அப்புறம் என் பாஸ்போர்ட் செக்..

கௌன்டர்ல இருந்த லேடி ஆஃபீசர் என்ன பார்த்து சிரிச்சாங்க.

லேடி ஆஃபீசர்: "I dont think you are going to France today, or any time soon...."

என் கிட்ட டிகெட்ட திரும்ப கொடுத்துட்டு...

லேடி ஆஃபீசர்: "You better get a movie ticket tonite! that would do!!..ha..ha"

எதுக்கு சிரிச்சாங்கனு தெரியல.

என் பாஸ்போர்ட்ட பார்த்தேன்... என் ஃபோடோல பெரிய மீசை....வீரப்பனோட மீச மாதிரி...அப்புறம் ..ஒரு பெரிய மச்சம் ...கறுப்பா ..பெருசா..என் கன்ணத்துல...பேணாவால வரஞ்சிருந்தது!!! என் டிக்கெட்.....அது மேல...எழுதி இருந்தது "Come back dear!"னு...பேருசா அதுவும் ப்ளாக் இங்க்ல!!!

"அஞ்சலீ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! "

------

என் பாஸ்கிட்ட emergency nu சொல்லி சமாளிக்கிறதுக்குள்ளே உயிர் போய்டுச்சு.

நேரா வீட்டுக்கு வந்தேன்....பயங்கர கோபமா...கதவ தட்டினேன்...கதவு தெறந்தேதான் இருந்தது..

வேகமா உள்ள போனேன்... அஞ்சலீ ஜன்னாலோராமா நின்நிட்டு இருந்தா. பக்கத்துல போய் அவ தோள பிடிச்சி திருப்பினேன்.

கௌதம்: " என்ன பன்னீருக்"

டக்குனு அவ கையால என் வாய மூடினா..

 "வேணாம் கௌதம் திட்டாத...ப்லீஸ்........."

என்ன கட்டிப்புடிச்சு...தோள்ல சாஞ்சா...!

தல குனிஞ்சிசுக்கிட்டே ....   "Im sorry..da...நான் ஒரு பைத்தியம்..".

கண்ணெல்லாம் தண்ணி...அப்படியே என்ன பார்த்தா..கண்ணுக்கு நேரா கண்ணு..

"எனக்கு உன்னோட வாழனும் கௌதம்......ஒவ்வொரு நிமிஷமும்..." "எனக்கு பயமா இருக்குடா.."


.காதலிக்கிறதுக்கும், ..அப்புறம் வாழ்றதுக்கும்...அஞ்சலிக்கிட்ட டைம் இல்ல...she had a divine commitmentனு சொல்லலாம்!!!

[அது தான் நான் அஞ்சலீ கிட்ட கடைசியா கோபப்பட்டது].

என்ன அப்போ கட்டி புடிச்சது ..இன்னும் விடல...! ரெண்டு பெரும் அப்படியே இருந்தோம். நான் அவ காது பக்கம் போய் மெதுவா...

"ஹேய் ..பொண்டாட்டி...ஐ லவ் யூ டி.."

என்ன இன்னும் இருக்கமா கட்டி புடிச்சு.. லேசா சிரிச்சா...

கௌதம்: "மூவீ போலாமா?!"....

அஞ்சலீ மெதுவா கண்ண தொடச்சிக்கிட்டே....பாவமா...."என்ன மூவீ?"...னு கேட்டா...


எனக்கு சிரிக்கிறதா.. அழுகிறதானு தெரியல......



ஆனா ஒண்ணு மட்டும் உன்மைங்க....

அஞ்சலீ இஸ் crazy ! ! !



-----------[நாட்கள் தொடரும்]------------------------------------------------------------------

அஞ்சலீ நாட்கள் ...  

Posted by Peter Abdul Jegadeesh in









இடம்: Emergency Ward - ICU


ஆப்பரேஷன் தியேட்டரிலிருந்து சீனியர் பெண் டாக்டர் வெளியே வந்தார்.


"மிஸ்‌டர் கௌதம்..."


கௌதம்: "Ya...its me..".


டாக்டர்: "பொண்ணோட பேரண்ட்ஸ் யாரும் வரலியா.?"


கௌதம்: "இல்ல..நான் மட்டும் தான்... anything serious!!"


----------


ஆப்பரேஷன் தியேட்டருக்குள்ள அப்போதான் ஃபர்ஸ்ட் டைம் பொறேன்..
அஞ்சலீ ஆழமான தூக்கத்துல இருந்தா. அவ முகம் முலுசும் ஆக்ஜிஜன் முஹமூடி மறச்சிருந்தது, சின்னதா ரெண்டு கண்ணு மட்டும் தெரிஞ்சது,கொஞ்சம் கூட அசையாம. அந்த ரூம்‌ல பீப் பீப் சத்தத்த தவற வேற எதுவும் இல்லை. எனக்கு அந்த சத்தம் சுத்தமா பிடிக்கல. கொஞ்ச நேரம் அவளோட வேரல பிடிச்சிக்கிட்டே கண்ண மூடி சேர்ல உட்கார்ந்தேன்.


பீப் பீப்....பீப்...பீப்...பீப்...பீப்...
சத்தம் அதிகமாச்சு...!!


"டாக்டர்..டாக்டர்"


என் ஹார்ட் பீட் அதிகமாச்சு...பேச்சு சரியா வரல..


"அஞ்சலீ.........அஞ்சலீ"
-----




"எதுவுமே.... சின்னதா இருந்தாதான்.. க்யூட்ஆ... அழகா இருக்கும்...நாய் குட்டி, பூனை குட்டி, ஐஸ்க்ரீம், சாக்லேட், கௌதம்னு உன்னோட பேரு...நம்ம வெட்டிங் ரிங்க், உன் மூக்கு கிட்ட இருக்கிற ஒரு மச்சம், எல்லாமே!",
இது அஞ்சலியோட philosophy..


அஞ்சலிக்கும் எனக்குமான நாட்களும் அப்படிதான்! Little, but cute and beautiful !


காதலிக்கிறதுக்கும், ..அப்புறம் வாழ்றதுக்கும்...அஞ்சலிக்கிட்ட டைம் இல்ல...she had a divine commitementனு சொல்லலாம், medical terms ல சொல்லணும்னா "------".


அப்பப்போ அஞ்சலீ சொல்லுவா,
"schedule ரொம்ப டைட்டா இருக்கு கௌதம், ப்லீஸ்.. டைம் வேஸ்ட் பண்ணாத...வா லவ் பண்ணலாம்".


-----


எனக்கு மனசு ரொம்ப ஹெவியா இருக்கு...வலிக்குது...! யார் கிட்டயாது பேசணும் போல இருக்கு....அஞ்சலீ கிட்ட ...ஆமாம்..இப்போ அஞ்சலீ கிட்ட பேச முடியாது.....ஆனா.. அஞ்சலி பத்தி பேசலாம் இல்ல. அது போதும்.


உங்களுக்கு... அஞ்சலீ பத்தீ தெரியுமா...?




-----[நாட்கள் தொடரும்]------------------------------------------------------------------------------------------------------------------------------